கையில் ஜி-பே... முகத்தில் மாஸ்க்! திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர்களை கையும் களவுமாகத் தூக்கிய தவெக அமைச்சர்; விஐபி தரிசன லஞ்சத்திற்கு விழுந்த சாட்டை!
விஐபி தரிசன கட்டணம் ₹4000: 'ஜி-பே' ஆதாரத்துடன் தூக்கிய அமைச்சர்!
திருச்செந்தூர்:
சினிமா திரையில் விஜய் நடித்த 'சர்கார்' அல்லது 'ரமணா' படக் காட்சிகளைப் பார்த்திருப்போம். ஆனால், அதே போன்ற ஒரு அசல் அதிரடி வேட்டையைத் தவெக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நிஜமாகவே நடத்திக் காட்டியுள்ளார்.
நாளை வைகாசி விசாகத் திருவிழா தொடங்க உள்ள நிலையில், பக்தர்கள் படும் கஷ்டங்களை நேரில் பார்க்க, எவ்வித பந்தாவும் இல்லாமல், சாதாரண டி-சர்ட், முகக்கவசம் (Mask) அணிந்து கொண்டு ஒரு சாமானிய பக்தனைப் போல அதிகாலையிலேயே வரிசையில் போய் நின்றார் அமைச்சர்.பொது வரிசையில் நகர்ந்து கொண்டிருந்த அமைச்சரை, அவர் யார் என்று தெரியாமல் அணுகிய கோவில் அர்ச்சகர்கள் சிலர், "வரிசையில் போனால் லேட் ஆகும், ₹4,000 கொடுத்தால் விஐபி (VIP) கேட் வழியாக உடனே கூட்டிட்டுப் போய் ஸ்பெஷல் தரிசனம் பண்ணி வைக்கிறோம்" என்று பேரம் பேசியுள்ளனர்.
"ஜி-பே பண்ணுங்க சார்" - லாக் ஆன லஞ்சக் கும்பல்!
அவர்கள் கேட்டதும், "கையில் அவ்வளவு கேஷ் இல்லையேப்பா" என்று அமைச்சர் இழுக்க, "நோ பிராப்ளம் சார், இந்த நம்பருக்கு 'ஜி-பே' பண்ணிடுங்க" என்று உடனே க்யூஆர் கோடை நீட்டியுள்ளனர் அர்ச்சகர்கள். அமைச்சர் ரமேஷும் தனது மொபைலை எடுத்து ₹4,000 தொகையை ஆன்லைனில் டிரான்ஸ்ஃபர் செய்துள்ளார்.பணம் அர்ச்சகரின் கணக்கிற்குச் சென்ற மறுவிநாடி, தனது முகக்கவசத்தைக் கழற்றி, "நான் தான் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசுகிறேன்" என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். லஞ்சப் பணத்திற்கான டிஜிட்டல் ஆதாரத்தை மொபைலிலேயே அமைச்சர் காட்டியதும், அங்கிருந்த அர்ச்சகர்களும், பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர்களும் பயத்தில் நடுங்கத் தொடங்கிவிட்டனர்.
விளம்பரம் இல்லை.. எச்சரிக்கை!
சம்பவ இடத்திலேயே அதிகாரிகளை வரவழைத்த அமைச்சர், லஞ்சம் கேட்ட அர்ச்சகர்களைக் கூப்பிட்டு விளக்கக் கடிதம் (Memo) வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், "கோவிலுக்கு வரும் சாமானிய பக்தர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் வேலை இனி தமிழ்நாட்டில் எந்தக் கோவிலிலும் நடக்கக் கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை பாயும்" என்று திருச்செந்தூர் கோவில் தலைமைப் பாதுகாப்பு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகும் 'தவெக' ஆக்ஷன்!
அமைச்சரின் இந்த அதிரடி 'ஸ்பாட் ஆக்ஷன்' வீடியோக்கள் மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. "இப்படிப் பண்ணுனா தான் இந்த லஞ்சப் பேய்களை ஒழிக்க முடியும்" என்று எளிய மக்கள் அமைச்சரைப் பாராட்டித் தள்ளுகின்றனர். அதே சமயம், "அமைச்சரிடமே ₹4,000 லஞ்சம் வாங்கியவர்களுக்கு வெறும் மெமோ மட்டும் போதாது, சஸ்பெண்ட் செய்ய வேண்டும்" என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
எது எப்படியோ, தமிழகக் கோவில்களில் ஆண்டாண்டு காலமாக நடக்கும் 'விஐபி வசூல் வேட்டைக்கு' எதிராகத் தவெக அரசு எடுத்துள்ள இந்த அதிரடி ஆரம்பம், மற்ற முறைகேடான கும்பல்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது.

Comments